தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அறநெறிப் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

0 118

எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் இந்து சமய அறநெறிப் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்குமாறு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

கொரோனா பேரிடர் காரணமாக, நாடளாவிய ரீதியில் இடை நிறுத்தப்பட்டிருந்த இந்து சமய அறநெறிப் பாடசாலைகளின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் வேளையில், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதைப் பொறுப்பானவர்கள் கண்காணிக்க வேண்டும்.

பெற்றோர், அறநெறிப் பாடசாலை நிர்வாகத்தினர், பொறுப்பான உத்தியோகத்தர்கள் என அனைவரும் இவ்விடயத்தில் அக்கறையோடு செயற்படுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.