Developed by - Tamilosai
இரண்டாவது நாளாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜரான அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவிடம் 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் ஆஜராகியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் வௌியிட்ட கருத்து சம்பந்தமாக தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அருட்தந்தை சிறில் காமினியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அவரிடம் 7 மணி நேர வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.