தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன இராஜினாமா?

0 225

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வைத்தியர் பிரசன்ன குணசேன ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாகவும் அவரது கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பது இன்னும் தெரியவில்லை என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளன.

உடல்நலக் குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர் பிரசன்ன குணசேன ஒரு புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டுவதற்கு ஒரு முன்னணி சேவையை வழங்கியுள்ளார்.

வைத்தியர் பிரசன்ன குணசேனவின் திடீர் முடிவால் சுகாதாரத் தரப்பினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.