Developed by - Tamilosai
இலங்கை அரசியலில் முத்தரப்பு கூட்டணிகளின் உருவாக்கங்களை விரைவில் காணமுடியும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச கூட்டணிக்குள் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. பங்காளிக்கட்சிகள், தமது அதிருப்தியை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன.
அத்துடன் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவும் பதவி துறக்க தயாராகிவிட்டார்.
அண்மையில் அனுரதப்புரத்தில் இடம்பெற்ற பொதுஜன முன்னணியின் மாநாட்டில் அரச பங்காளிக்கட்சிகள் பங்கேற்காமையானது, பங்காளிக்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள விரிசலை கோடிட்டுக் காட்டுகிறது.
எனவே பொதுஜன பெரமுன கட்சியின் உடைவை விரைவில் எதிர்பார்க்கமுடியும்.ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனிவழி செல்லக்கூடும் எனவும், ஏனைய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.