தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும்”

0 325

தற்போது தாங்க முடியாதளவு அதிகரித்துள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வலியுறுத்தியுள்ளார்.

விலைவாசி உயர்வால் பொதுமக்கள் படும் கஷ்டங்களை அவதானிக்கும் போது அரச ஊழியர்களின் சம்பளம் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும்.

அப்போது தான் வாழ்க்கைச் செலவுச் சுமையை ஓரளவுக்கேணும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியும். சமுகத்தில் கௌரவத்தோடு வாழும் அவர்கள் தங்களது அந்தஸ்தை இழக்கும் நிலையை உருவாக்கி விடாதிருக்க அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று  ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்திலும் கணிசமான அதிகரிப்புச் செய்யப்பட வேண்டும். சமுர்த்தி உள்ளிட்ட சகல அரச கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்கள் கடன் இன்றி வாழும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.

மக்களுக்காகத் தான் அரசாங்கம் இருக்கின்றது. எனவே, மக்களின் நலன் பேணும் விடயத்தில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அரசாங்கத்தைக் கொண்டு நடத்த நிதி இல்லை என்பதற்காக சகல பொருட்களினதும் விலைவாசியை கண்ணை மூடிக் கொண்டு உயர்த்தி மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கும் நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.