Developed by - Tamilosai
அரச ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கப் பரிந்துரைப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சமகால அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்ட உரையில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நடைமுறை சமுர்த்தி செயற்பாடுகளை நவீன மயப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், கிராமிய அபிவிருத்தி இயக்கமாக அதனை மாற்ற எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் வணிக ரீதியான அணுகுமுறையை போட்டி நிலைமைக்கு அதனை எடுத்துச் சென்று, சகலருக்கும் பலன் கிடைக்கக் கூடிய வகையில் மாற்றுதல்.
நேரடியான வருமானத்தை ஈட்டுவதற்குப் பயன்படாத சொத்துக்களைப் பயன்படும் வகையில் மாற்றுதல்.
நாடு முழுவதும் தொலைத்தொடர்பு கட்டமைப்பை விரைவில் நிறுவி, நாடு முழுவதிலுமுள்ள 10,115 பாடசாலைகளுக்கும் உரிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதிவேக இணைய ப்ரோட் பேண்ட் வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள முறைமை ஏற்படுத்தப்படும். உற்பத்தித்திறன் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டே இது செய்யப்படுகின்றது எனவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.