தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரச ஊடக நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர்கள்

0 70

அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் அரச ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அதன் முன்னைய தலைவர் ஹட்சன் சமரசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அசங்க பிரியநாத் ஜயசூரிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் , சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக பட்டயக் கணக்காளர் கணக அமரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஊடக அமைச்சில் வைத்து வழங்கப்பட்டன.  

Leave A Reply

Your email address will not be published.