தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரசை விமர்சிக்கும் உரிமை எமக்கும் இருக்கின்றது. சு.க. எச்சரிக்கை!

0 147

இந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் காரணம். ஜனாதிபதித் தேர்தலின்போது எமது 15 லட்சம் வாக்குகள்தான் தீர்க்கமானதாக மாறியது. அன்று மொட்டு கட்சியுடன் வர சொன்ன மக்கள், இன்று மீண்டும் அந்த கட்சியுடன் வேண்டாம் என சொல்கின்றனர். நாம் மக்கள் பக்கம் நின்றே முடிவெடுக்க வேண்டும். இந்த அரசை விமர்சிக்கும் உரிமை எமக்கும் இருக்கின்றது.

வெளியேறும் காலப்பகுதியை எமது கட்சியின் மத்திய குழு தீர்மானித்தால் நாம் வெளியேறுவோம். அதுவரை அரசியல் இருப்போம். அரசை தவறான வழியில் செல்ல இடமளிக்கமாட்டோம்.

அரசு தவறான வழியில் பயணிக்குமானால் அதற்கான ஆதரவை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒருபோதும் வழங்காது.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.