தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரசு ஆட்சிக்கு வரும்போது பலமாய் இருந்த அரச ஊழியர்கள் சுமையாகி விட்டனராம்!

0 162

2022 நிதியாண்டிற்கான பாதீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து  உரையாற்றும் போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

அரசாங்க ஊழியர்கள் இந்த நாட்டிற்கு சுமையாக உள்ளனரென. இது உண்மையாக வேதனையான வார்த்தை. காரணம் இதே ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது அரச ஊழியர்கள் அவர்களுக்குப் பலமாகத் தெரிந்தார்கள்- இருந்தார்கள். 

ஆனால், இன்று ராஜபக்ஷ ஆட்சியாளர்களின் தீர்க்க தரிசனம்  இல்லாத செயற்பாடு காரணமாக நாட்டின் பொருளாதாரம் தலைகீழாக மாறியதால் அரச ஊழியர்கள் தற்போது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு சுமையாக மாறிவிட்டனராம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் விசனம் வெளியிட்டுள்ளார்.

உண்மையில் இந்த நாட்டின் சகல நிர்வாகத் துறைகளின் செயற்பாட்டிற்கும் அரச ஊழியர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாகும்.

 அவர்களது அர்ப்பணிப்பும் தியாகமும் மதிக்கப்பட வேண்டியது. உதாரணமாக சுகாதாரத்துறை கொவிட் தாக்கத்தின் போது மிக அர்ப்பணிப்பாக தங்களை தியாகம் செய்து கடமையாற்றியமையால் தான் நாடு பெரும் அவலத்திலிருந்து தப்பிப் பிழைத்தது.

ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பெரும் பக்க பலமாக இருக்கும் படைத்துறை கூட அரசாங்க ஊழியர்கள் என்பதை நிதி அமைச்சர் மறந்து விட்டாரோ? அல்லது உண்மையாக அவர்களும் சுமையாக மாறிவிட்டார்களா? 

இந்த நாட்டிலுள்ள சகல துறைசார் ஊழியர்களும்  நாட்டிற்கு மிகப் பெறுமதியானவர்கள் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. 

ஆட்சியாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவை இன்னொரு தரப்பிற்கு சுமத்துவது அரசாங்கத்தின் இயலாமையே வெளிப்படுத்தியுள்ளது. 

ஆட்சியாளர்கள் வாழ்க்கைச் சுமையை மக்கள் மீது தாங்கமுடியாத அளவிற்கு ஏற்றிவிட்டதனால்  இன்று சம்பள பிரச்சினை கோரி தொழில் சங்கங்கள் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டனர்.  இந்த நடவடிக்கை அரசுக்கு கசப்பாக மாறியதால்  அரச ஊழியர்கள் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு சுமையாக மாறி விட்டனர்.

இன்று எவ்வாறு அரச ஊழியர்கள் சுமையாக மாறினார்களோ நிச்சயமாக நாளை இந்த நாட்டு மக்களும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு சுமையாக மாறுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.