Developed by - Tamilosai
அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம்
அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் தாம் தாக்கப்பட்டமை தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தான் கஷ்டப்பட்டு தப்பியதாகவும் மக்களுக்காக வீதியில் இறங்க பின்வாங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் கூறியதாவது, “நானும் அங்கு சென்றேன். அந்த நேரத்தில் நான் குண்டர்களால் தாக்கப்பட்டேன். குண்டர்கள், அரச பயங்கரவாதிகள், அரச காட்டுமிராண்டிகள் போன்றோருக்கு பிரேமதாசாக்கள் ஒருபோதும் பயப்படுவதில்லை .
எனது உத்தியோகபூர்வ வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கஷ்டப்பட்டு தப்பி வந்தேன்.
கண்ணாடித் துண்டுகள் என்மீது பாய்ந்தன. மக்களுக்காகவே வீதிக்கு வந்தேன். மக்களுக்காக வீதிக்கு வர அஞ்சமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.