Developed by - Tamilosai
அரசியல் நோக்கங்களைக் கொண்ட அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களே அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மாணவர்களின் எதிர்காலத்தைக் காட்டிக்கொடுக்க முடியாது.
மாணவர்களின் சார்பில் நின்று அவர்களின் கல்விக்கு முன்னுரிமையளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாம் நடைமுறைப்படுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்வதற்கு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவினால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் உபகுழு உறுப்பினர்கள் அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அவை தொடர்பில் தெளிவுபடுத்தினர்.
எனினும் அரசியல் நோக்கம் கொண்ட தொழிற்சங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. சிறுவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தொழிற்சங்கள் அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.