Developed by - Tamilosai
பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் யோசனைப்படி இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் அரச ஊழியர்கள் அவர்களின் அடிப்படைச் சம்பளத்துக்கு ஈடான தொகையொன்றையே மொத்தக் கொடுப்பனவுகளாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அரசாங்க மருத்துவர்கள் மாதாந்தம் சுமார் 30 ஆயிரம் ரூபா வரையான கொடுப்பனவு இழப்பை எதிர்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் அரசாங்கப் பணியில் ஈடுபடுவது தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளனர் எனவும் அரச மருத்துவர்கள் சங்கத்தின் பிரமுகர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இவ் அதிருப்த்தி காரணமாக எதிர்வரும் காலங்களில் அரசாங்க மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பணியிலிருந்து விலகி வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்குச் செல்லும் நிலை ஏற்படக் கூடும் எனவும் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.