தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரசாங்கம் மீது அதிருப்தி; நிலைமை சீர்செய்யப்படும் பொறுமையாக இருங்கள் – ஜீவன்

0 156

கோட்டாபய அரசாங்கம் மீது மக்கள் தற்போது கடும் அதிருப்தியில் உள்ளனர். இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். நிலைமை சீர்செய்யப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கிறிஸ்லஸ்பாம் – கே.ஜி.கே. பாதை மக்கள் பாவனைக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 “பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும்.

இவ்விரண்டு விடயங்களையும் சிறப்பாக செய்து முடித்தால் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தானாகவே நடக்கும்.
நன்றி மறக்கக்கூடாது என அனுசியா அம்மையார் குறிப்பிட்டார்.

எனவே, நெருக்கடியான கால கட்டத்திலும் வீதி புனரமைப்புப் பணியில் ஈடுபட்ட வீதி அபிவிருத்தி சபை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பொருட்களின் விலையேற்றத்தால் மக்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசாங்கம்  மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
 இங்கு மட்டுமல்ல உலக நாடுகளிலும் இந்நிலைமை நீடிக்கின்றது.

எனவே, பொறுமை காக்கவும். இன்னும் ஒரு வருடத்துக்குள் நிலைமை சீர் செய்யப்படும்.  நாங்கள் என்றும் உங்களுடன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.