தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரசாங்கம் இந்த ஆண்டில் மட்டும் 2.3 ட்ரில்லியன் கடன் பெற்றுள்ளது – மரிக்கார்

0 305

தற்போதைய அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2.3 ட்ரில்லியன் கடன்களைப் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

குறித்த பெரிய தொகை பணத்தை அரசாங்கம் எதற்குப் பயன்படுத்தியது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கடந்த அரசாங்கத்தால் பெறப்பட்ட கடன்களைத் தீர்ப்பதற்கே குறித்த கடன்தொகை பெறப்பட்டது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் தாமரைக் கோபுரம், துறைமுகங்கள், மைதானங்கள், விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் குடும்பத்தினர் பயணம் செய்வதற்கும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் பெரும் தொகை கடனாகப் பெறப்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதேவேளை, நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுவதாகவும் எஸ்.எம்.மரிக்கார் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.