Developed by - Tamilosai
அரசாங்கத்துடன் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் அரச தரப்பினருடன் கலந்துரையாடுகின்றோம். அதேபோன்று நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடுவோம்.
அதனை யாரும் தடுக்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதேபோன்று நாங்கள் அமைத்த அரசாங்கத்தை சரியான வழிக்குக் கொண்டுசெல்வதற்காக நியாயமான விமர்சனங்களையே தெரிவிக்கின்றோம். அதற்கான உரிமை எங்களுக்கு இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை விமர்சித்து வருவது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.