Developed by - Tamilosai
நாட்டை பொறுப்பேற்க எப்போதும் எதிர் கட்சி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று நாடளுமன்றில் உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
எதிர்கட்சி எப்போதும் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை மாத்திரம் கூறிக் கொண்டிருக்கமுடியாது என்றும் எந்த சந்தர்ப்பத்தின் போதும் நாட்டை பொறுப்பேற்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் .
நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கத்தை எதிர்கட்சி பொறுப்பேற்கும் போது ஜனாதிபதி பதவியையும் சேர்த்தே பொறுப்பேற்கமுடியும் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அதற்கு பொருத்தமானவர் சஜித் பிரேமதாசவே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அண்மையில் நாடாளுமன்ற வளவில் சிறப்பு அதிரடிப்படையினரை காவல்துறையினர் நடத்திய விதம் தொடர்பில் கருத்துரைத்த அவர், படையினரில் பலர் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் என்ற கருத்தை பலர் விமர்சிப்பதாக குறிப்பிட்டார்.
எனினும் தாம் உட்பட இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மற்றும் ஜனாதிபதி ஆகியோர் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் வரை மாத்திரமே படித்தவர்கள் என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.