Developed by - Tamilosai
அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை விடுத்து, அமைச்சர்களான விமல் வீரவன்ஷ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
புத்தளத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த இருவரும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேறொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் குறித்த இருவரும் அரசாங்கத்தை விமர்சிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்குப் பதிலாக விமல் வீரவன்ஷ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இந்த விடயத்தில் ஒரு யதார்த்தமான அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.