Developed by - Tamilosai
அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது என மத்திய செயற்குழு தீர்மானத்தால், அனைத்து பதவிகளையும் கைவிட்டு வெளியேற தயாராக இருக்கின்றோம் என மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட அதிகார சபைக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மகிந்த அமரவீர அரசாங்கத்தில் இருந்து விலகுவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உடனடியாக தீர்மானித்தாலும் அதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருப்பதா அல்லது வெளியேறுவதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கிராம மட்டத்தில் கிளை, சங்கங்களை கூட்டி, அந்த தீர்மானம் எடுக்கப்பட்டால், அதற்கு கட்டுப்பட கட்சி தயாராக இருக்கின்றது எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.