தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நிச்சயம் நடக்கும் – எதிரணி சூளுரை

0 201

எத்தகைய  தடைகள் வந்தாலும் எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு ஹைட் பார்க்கில் நடத்தப்படவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நிறுத்தப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

எமது ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக சுகாதாரப் பணிப்பாளர் ஊடாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒருகட்டமாக சுகாதாரப் பணிப்பாளர் வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். 

எனினும் முகக்கவசங்களை அணிந்து கொண்டு இடைவெளிகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும். 

அரசாங்கம் எங்களை அடக்கவே நினைக்கிறது. இன்று இந்த நாட்டில் எங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. 

ஆயிரக் கணக்கானவர்களைக் கூட்டி, ஒரு மண்டபத்தில் கட்சி ஆண்டு விழாவை நடத்தும் போது, இந்தச் சட்டமோ, சுகாதார ஒழுங்குகளோ தேவைப்படாத போது ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரம் ஏன் இந்தச் சட்டம் என்று பொலிஸாரிடமும்  சுகாதாரத் துறையினரிடமும் வினவுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.