Developed by - Tamilosai
நாட்டின் தேசிய வளங்களை விற்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அதற்கு எதிராக வீதியில் இறங்கத் தயார் என பெற்றோலியம், துறைமுகங்கள் மற்றும் மின்சாரத்திற்கான ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போது அதன் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நிறுவனங்களுடன் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் எதிர்கால ஒப்பந்தங்களை தயவு செய்து திரும்பப் பெறுமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
பெற்றோலியம், துறைமுகங்கள் மற்றும் மின்சாரத்திற்கான ஐக்கிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பேராயரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.