தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு பொருளாதார நெருக்கடியை உருவாக்க சிலர் முயற்சி”

0 172

 அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சில தரப்பினர் நாட்டிற்குள் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ குற்றம் சாட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்குள்ளேயே இருந்துகொண்டு எதிர்ப்பை வெளியிடும் நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்திருந்தால் பொறுத்துக் கொண்டிருக்க முடியும் எனக் குறிப்பிட்ட அவர், அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு நடந்துகொள்வது துரதிஷ்டவசமானது என்றும் கூறினார்.

மேலும் அரசாங்கம் தொடர்பில்  பொதுமக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்துவதன் மூலம் என்ன வெற்றியை அடைய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான விசேட சந்திப்பில் இந்தப் பிரச்சினைகள் குறித்து எவரும் கவலை தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.