தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரசாங்கத்தின் பங்காளி என்பதால் அனைத்துத் தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்கத் தேவையில்லை – மைத்திரி

0 396

 பங்காளிகளாக இருந்தாலும் அரசாங்கத்தின் அனைத்துத் தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதை அரசியல் நிலைமையில் எந்தவொரு கட்சிக்கும் தனித்துச் செயற்பட முடியாது என்பதால் சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் நாட்டை நேசிக்கின்ற, மக்களின் துயரங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய, ஊழல் மோசடி இல்லாத குழுவொன்றுடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் எதிர்காெண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு அரசாங்கம் முறையான தீர்மானங்களை மேற்கொண்டு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உரம் தொடர்பாக தன்னிச்சையாகச் செயற்படாமல் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலாேசனைகளுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.