Developed by - Tamilosai
அரசாங்கத்திலிருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்காமல் வெளியேறியதன் பின்னர் விமர்சியுங்கள் என அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘அரசாங்கத்திலிருந்து கொண்டு ஆளும் கட்சியினர் அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
அரசாங்கத்திலிருந்து கொண்டு எதிர்க்கட்சிக்கான வேலையை செய்ய முடியாது.
அரசாங்கத்திலிருந்து வெளியேறியதன் பின்னர் எங்களுடன் இணைந்து அந்த வேலையைச் செய்யுங்கள்.
அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் அரசாங்கத்தை விமர்சிப்பதாகவே நாங்கள் நினைப்போம்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.