தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் காரணமாக பொதுமக்களிடம் “பிற்பாக்கெற்” அடிக்கும் அரசாங்கம்..

0 276

அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் காரணமாக பொதுமக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தவறியமைக்கு மேலதிகமாக பொதுமக்களை பிக்-பொக்கெட் அடிப்பதை இது சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 98 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் ஒரு லீற்றர் டீசல் 126 ரூபாய்க்கும், ஒரு லீற்றர் பெற்றோல் 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தவறியமைக்கு மேலதிகமாக பொதுமக்களை பிக்-பாக்கெட் செய்வதை இது சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.

குறைந்த வருமானத்துடன் எரிபொருளுக்காக பொதுமக்கள் வரிசையில் நிற்கும் போது, அரசாங்கம் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளின் மூலமும் 120 ரூபாய் இலாபத்தை ஈட்டுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய சிறிய அளவிலான இறக்குமதி போதுமானதாக இருக்காது என்றும், மொபைல் ரீலோட் முறையின்படி நாடு செயல்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிலையான திட்டம் மற்றும் வேலைத்திட்டத்துக்கு அழைப்பு விடுத்த அவர், பொதுமக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

Leave A Reply

Your email address will not be published.