Developed by - Tamilosai
மீண்டும் அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு அரசதலைவர் விடுத்த கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை மாற்ற முடியாது எனவும் மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது எனவும் தமது கட்சியின் நாடாளுமன்ற குழு அரச தலைவரிடம் தெரிவித்துள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டத்தை முன்வைக்குமாறும் அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.