Developed by - Tamilosai
அம்பாறை மாவட்டத்தில் சிறுமி திடீரென மாயம்
நிந்தவூர் 2 ஆம் கஸ்ஸாலி வீதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க வதுர்தீன் பாத்திமா சஜானா அம்பாறை, கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இருந்து நேற்று மதியம் 2.30 மணியிலிருந்து மாயமாகி உள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி பலரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த பாடசாலையில் பாதுகாப்பிற்காக நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
நேற்று பகல் உணவினை உட்கொண்ட பின்னர் திடிரென அவர் அங்கிருந்து காணாமல் சென்று விட்டதாகவும் பாடசாலை காப்பாளர் தெரிவித்துள்ளதாக காவல்துறை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.