Developed by - Tamilosai
லங்கா சமசமாஜக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் பிரதான கூட்டணிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் குறித்து கலந்துரையாட சந்தர்ப்பத்தைக் கோரிய போதிலும் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் அதற்கு எந்தவித பதிலையும் வழங்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இத்தகைய நிலையில், அரசாங்கத்தின் கீழ் கூட்டணியில் இருக்கக்கூடாது என்பது தனது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், லங்கா சமசமாஜக் கட்சியின் அடுத்த அரசியல் சபைக் கூட்டத்தில் அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பான யோசனையை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.