தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அமைச்சரவை சட்டவிரோதமானது – உயர்நீதிமன்றில் மனு

0 144

ஜனாதிபதியினால் தற்போதைய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என அறிவித்து அதன் செயற்பாடுகளை கைவிடுமாறு தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சங்கவியலாளர்களின் தேசிய முன்னணியின் செயலாளர் கபில ரேணுகவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அமைச்சரவைக்கான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது அரசியலமைப்பின் 47-1-அ மற்றும் ஆ சரத்துக்களுக்கு முரணானது எனக் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக அமைச்சரவை, சகல இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி செயலாளர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 82 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.