Developed by - Tamilosai
வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்ததும், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், அரச நிறுவனங்களின் உயர் பதவிகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்களான ரொஷான் ரணசிங்க, சனத் நிஷாந்த ஆகிய இருவரும் அமைச்சரவைக்கு உள்வாங்கப்படலாம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.