தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அமெரிக்க செனற்றரால் பாலியல் வன்கொடுமை – ஹிலாரியின் உதவியாளர் பரபரப்பு தகவல்

0 183

அமெரிக்க செனற்றரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் குறித்து ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் ஹூமா அபெடின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள குறித்த புத்தகத்தில் அவர், 2000 ஆம் ஆண்டு நடுப்பகுதியில்,  அரசியல்வாதி ஒருவார் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், ஒபாமா ஆட்சிக் காலத்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான திருமதி கிளிண்டனின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவரான அபெடின் காணப்பட்டார்.

அவர் 2001-09 க்கு இடையில் நியூயோர்க்கிற்கான அமெரிக்க செனற்றராக இருந்த கிளிண்டனுக்காக தனது பணியை மேற்கொள்ளும்போது இந்த பாலியல் வன்கொடுமை இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

45 வயதாகும் ஹூமா அபெடின், செனற்றரின் அடையாளத்தையோ அல்லது அவரது கட்சியையோ வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.