Developed by - Tamilosai
அமெரிக்கா – சீனா இடையே கடும் போட்டி

இலங்கையில் கண்டறியப்பட்ட ‘ஆசியாவின் ராணி என பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நீலக்கலை கொள்வனவு செய்வதில் அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நீலக்கல்லை, இணையவழியில் இடம்பெறும், சர்வதேச ஏல விற்பனையில் முன்வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் முன்னதாக விலைமனு கோரலுக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ள நிலையில், சீனாவும் இந்த போட்டியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வொஷிங்டன் நகரில் உள்ள நூதனசாலை ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக அமெரிக்காவும் குறித்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
310 கிலோகிராம் எடைகொண்ட ஆசியாவின் ராணியென அழைக்கப்படும் இந்த நீலக்கல், இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு சொந்தமான ஆய்வகத்தில், இந்த நீலக்கல் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஒற்றைப் படிகத்தினாலானமையினால் அதிக மதிப்புமிக்க இந்த நீலக்கல், 15 இலட்சத்துக்கும் அதிக கரட் பெறுமதியானது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.