Developed by - Tamilosai
கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட கலந்துரையாடலை நடத்த ஆளும்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு நீடித்த இந்தக் கலந்துரையாடலில் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் விநியோக ஒப்பந்தம் குறித்த மேலதிக தீர்மானங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.