Developed by - Tamilosai
ஆபிரிக்க நாடொன்றிலிருந்து அமெரிக்காவுக்கு வந்தவருக்கு ஒமிக்ரொன் திரிபு கொரோனா வைரஸ் தொற்று இனம் காணப்பட்டுள்ளதாக
அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுக்கு நாடு திரும்பிய பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள்.
ஒமிக்ரொன் திரிபு கொரோனா தொற்றுக்குள்ளான நபர் முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒமிக்ரோன் திரிபு கண்டறியப்பட்டதை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி வேலைத்திட்டத்தினை வேகப்படுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.