Developed by - Tamilosai
அமெரிக்கர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கும் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு வழி வகுத்தவர்கள்-வசந்த சமரசிங்க (jVP)
தற்போதய அரசாங்கத்திற்குள் பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இவர்களுக்கு எதிராக பொதுமக்கள் ஒன்று திரண்டு வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜை ஒருவருக்கு நாடாளுமன்றதில் சிறப்புரிமைகளை வழங்குவதற்கு பங்களித்த அனைவரும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்:-20ஆவது திருத்தம், அமெரிக்காவிற்கு பங்குகளை விற்றமை திருகோணமலை எண்ணெய் தொட்டியை இந்தியாவிற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தில் உள்ள அனைவரும் ஆதரவளித்ததாக அவர் கூறினார்.
நாட்டைப் பாதுகாப்பதற்கும், அரச சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் முன்னர், இவற்றுக்கு எல்லாம் ஆதரவளித்த அனைவரும் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
மேலும் அமெரிக்கர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கும் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு வழி வகுத்தவர்கள் இவர்களே.தற்போதய அரசாங்கத்திற்குள் பல பிரச்சினைகள் காணப்படுவதால் இவர்களுக்கு எதிராக பொதுமக்கள் ஒன்று திரண்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், தமது பதவிகளையும் அரசியல் வாழ்க்கையை பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் சிலரின் கருத்துக்களை கேட்டு மக்கள் ஏமாற கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.