Developed by - Tamilosai
கடந்த 9 ஆம் திகதி நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரின் மெய்ப்பாதுகாவலரும் கொல்லப்பட்டனர்.
கொலை தொடர்பில் நேற்றைய தினமும் 24 வயதான இளைஞர் நிட்டம்புவ பகுதியில் கைது செய்யப்பட்டார். இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.