Developed by - Tamilosai
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபி விமான நிலையத்திற்கு அருகில் நேற்றைய தினம் (17) நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டமை குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அந்த நாட்டுக்கான இலங்கை தூதுவர் மல்ராஜ் டி சில்வா தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை தூதரகம் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக அவர் கூறுகின்றார்.
சம்பவத்தில் இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில்இ அது குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும்இ இந்த தாக்குதலில் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.
அபுதாவி விமான நிலையத்திற்கு அருகில் பயணித்த எரிபொருள் தாங்கிகள் மீது நேற்று (17) ட்ரோன் விமானங்களின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு இந்திய பிரஜைகள் மற்றும் ஒரு பாகிஸ்தான் பிரஜை அடங்களாக மூவர் உயிரிழந்துள்ளனர்.