தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- கெஹெலிய ரம்புக்வெல்ல

0 213

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையை போன்று, கொரோனா வைரசு தொற்று பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டதாக சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசு தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முறையில் நடவடிக்கை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குகிறது. ஜனாதிபதி இந்த கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் முன்வந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நேற்று (29) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பமாகி, இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது. அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.