Developed by - Tamilosai
இலங்கையில் வழங்கப்படும் அனைத்து விமான டிக்கெட்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நாணய மாற்று வீதம் அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் வழங்கப்படும் அனைத்து விமானப் பயணச்சீட்டுகளுக்கான கட்டணம் 27% ஆக அதிகரிப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.