Developed by - Tamilosai
அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மார்ச் 7ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகி மார்ச் 05ஆம் திகதி நிறைவடைகிறது.