தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதில் தயக்கம்!

0 90

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை விற்பனை செய்ய முடியாது என்ற அச்சத்தில் குறித்த நிறுவனங்கள் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய தயங்குவதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உரப் பிரச்சினை தொடர்பில் அனுராதபுரம் – திறப்பனை – உலங்குளம விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கிடையில், உரம் கிடைக்காமல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பொலன்னறுவை, ஹிங்குராக்கொட மற்றும் ஹொரவபொத்தானை ஆகிய பிரதேசங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேதன திரவ உரம் தரமற்றது என விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.