Developed by - Tamilosai
மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டுமானால் தேர்தல் முறைமை தொடர்பான திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு கட்டாயம் சபையில் அனுமதி பெறப்பட வேண்டுமென வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சபையில் சற்று முன் அறிவித்தாா்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டாா்.
இந்த மாகாண சபை தேர்தல் இவ்வளவு காலம் இடம்பெறாமல் இருப்பதற்கு கடந்த நல்லாட்சி அரசாங்கமே காரணம். தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாலேயே இந்த தேர்தல் இதுவரையில் காலந்தாழ்த்தப்பட்டு வருகின்றது. கடந்த அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளின் காரணமாகவே தொடர்ச்சியான தேர்தல் இடம்பெறாமல் இருக்கிறது.
அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழு வாரத்துக்கு இருமுறை கூடி இதுதொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. ஆகவே, எவ்வளவு விரையில் தேர்தல் முறைமைதொடர்பில் இறுதி முடிவெடுக்கப்பட்டு அந்த திருத்தம் சபையில் அனுமதிக்கப்பட்டால் மாத்திரமே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றாா்.