தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அனிருத்தை தான் திருமணம் செய்வேன்… பிரபல பாடகி கொடுத்த ஷாக்!

0 98

தமிழ் சினிமாவில் தற்போது இசையில் கொடிக்கட்டி பறப்பவர் தான் அனிருத். அண்மையில் இவரது இசையில் வெளியான டான், பீஸ்ட் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தற்போது அனிருத் சியான் 60, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம், தலைவர் 169 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

மேலும், இசை ஆல்பங்களில் நடிப்பது, விளம்பர படங்களில் நடிப்பது என மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார். இவர் விக்ரம் படத்திற்காக மட்டுமே 2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார் என தகவல்கள் வெளிவந்தது.

அண்மையில், இவரும் நடிகை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாகவும், இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. ஆனால், இதெல்லாம் பொய் என தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், 31 வயதாகும் அனிருத்தை பிரபல பாடகி திருமணம் செய்ய தயார் என கூறிய தகவல் பெரியதாக பேசப்பட்டு வருகிறது

அதாவது இளம் பின்னணி பாடகியான ஜொனிதா காந்தி அனிருத் இசையமைத்த படங்களில் முக்கியமான பாடகியாக வலம் வருகிறார். இதனால் இவரின் மார்க்கெட்டும் உயர்ந்ததுள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர், விளையாட்டாக திருமணம் குறித்த கேள்வியை எழுப்ப, அதில் சூர்யா, ரன்வீர் சிங், மற்றும் அனிருத் இந்த மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு ஜொனிதா அனிரூத்தை தான் திருமணம் செய்துகொள்வேன். ஏனென்றால் அவர் தான் திருமணம் செய்யவில்லை என விளையாட்டாக பேசியுள்ளார்.

இதனால், இதை வைத்து நெட்டிசன்கள் கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும், அனிருத்தின் வலையில் ஜொனிதா சிக்கி விட்டார் எனவும் இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் உலா வரத்தொடங்கி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.