Developed by - Tamilosai
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கம்பஹா பிரதேசத்தில் நேற்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலை அடுத்து, குறித்த இடத்தில் அமைதியின்மை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், பொலிஸாரின் தலையீட்டில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் இருவரை, அங்கிருந்த சிலர் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன