தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அத்தியாவசிய பொருட்களுக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வளங்கும் இந்தியா!

0 386

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இன்று பிற்பகல் விரிவான இணையவழி சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த சந்திப்புத் தொடர்பில் அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்ததுடன், மேலும் தெரிவித்தாவது, 

அத்தியாவசிய பொருட்களுக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி மற்றும் எரிபொருள் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கடிதம் வழங்குவது குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவாக மற்ற சர்வதேச பங்காளிகளின் முன்முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளும் என்று ஜெய்சங்கர் உறுதியளித்தார்.

எரிசக்தி பாதுகாப்புக்கு பங்களிக்கும் திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்தின் முன்னேற்றத்தையும் இந்தியா வரவேற்றது.

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் இந்தியாவின் திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்தும் நிதியமைச்சர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் பரிசீலித்தனர்.

இதேவேளை, மனிதாபிமான நடவடிக்கையாக தற்போது இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறி்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.