Developed by - Tamilosai
எதிர்வரும் 2 வாரங்களில் நாடு முழுவதும் அரச துறையில் மட்டுமன்றி தனியார் துறையிலும் அத்தியாவசிய ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அரச ஒளடதவியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்க்கான மருந்துகள் குறைவடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.
கடன் சான்றுப் பத்திர விடுவிப்பு, திறைசேரியால் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக ஒளடத தட்டுப்பாடு ஏற்படுகிறது.
அதேநேரம், டொலர் பிரச்சினை காரணமாக தனியார் துறையிலும் ஒளடத தட்டுப்பாடு ஏற்படும் என அரச ஒளடதவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் திலக்கரத்ன தெரிவித்தார்.