தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

0 76

  அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம 12.3 ஆம் கட்டைக்கு அருகில் இன்று காலை பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் 1969 அம்புலன்ஸ் வாகனம் உட்பட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன.

இச்சம்பவத்தில் 5 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களுள் பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.