தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதிரடி காட்டிய இந்திய அணி! ரசிகர்கள் உற்சாகம்!

0 119

இந்தியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட ஸ்கொட்லாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

போட்டியில் மொஹமட் சமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

ஜஷ்பிரிட் பும்ரா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
ஜார்ஜ் முன்சி அதிகபட்சமாக 24 ஓட்டங்களை ஸ்கொட்லாந்து அணி சார்பில் பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து 86 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் ஆரம்பம் முதல் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரோஹித் சர்மா 16 பந்துகளில் 30 ஓட்டங்களையும், கே.எல். ராகுல் 19 பந்துகளில் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.