Developed by - Tamilosai
கட்டுப்பாட்டு விலையினை மீறி அதிக விலைக்கு அரிசியினை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்கள் மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் அவர்களில் வர்த்தகர்கள் இருவருக்கு 1 லட்சம் ரூபா மற்றும் 5 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி 220 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 230 ரூபாவாகவும், கிரி சம்பா கிலோகிராம் 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் அதிகாரசபையினால் அண்மையில் வெளியிடப்பட்டது.