தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதிக ஒமைக்ரொன்பரவல் மேல் மாகாணத்திலேயே!

0 187

நாட்டில் இரண்டு ஒமைக்ரொன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றின் அதிக பரவல் மேல் மாகாணத்திலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 75 பேருக்கு ஒமைக்ரொன் வைரஸ் திரிபு கண்டறியப்பட்டதாக கலாநிதி சந்திம ஜீவந்திர நேற்று (22) தெரிவித்தார்.
78 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 75 பேருக்கு ஒமைக்ரொன் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்திர குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் கொழும்பு, அவிசாவளை, பொரலஸ்கமுவ, ஹோமாகம, கட்டுகொட, கொஸ்கம, மடபான, பாதுக்க, வெல்லம்பிட்டி, கொலன்னாவ, கல்கிசை, நுகேகொடை, அங்கொடை, பதுளை, காலி மற்றும் ருவன்வெல்ல முதலான பகுதிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Leave A Reply

Your email address will not be published.