தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதிகாலை விபத்து- 06 பேர் படுகாயம்

0 59

இன்று (15) அதிகாலை 4.30 மணியளவில் பொஷன் நிகழ்விற்காக அனுராதபுரம் சென்று மீண்டும் வீடு திரும்பிய காரொன்று திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி சுகதகம பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரில் மூவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கும் மற்றைய கணவர் மனைவி பிள்ளை ஆகிய மூவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவ்பொத்தானை பொலிஸார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.